ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்
Published on

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் களைகட்டி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியை பொருத்தவரை தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் ஷர்மாவின் அபார சதத்தால் இந்திய அணி வெற்றிப் பெற்றது. அதேபோன்று இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 

அதேசமயம் ஆஸ்திரேலியா அணி கடந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சற்று போராடிதான் வெற்றிப் பெற்றது. அதனால் இன்றைய போட்டி ஆஸ்திரேலியா அணிக்கு சற்று சவாலாக இருக்கும். இந்த இரு அணிகளிலும் கடந்தப் போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்தப் போட்டியில் களமிறங்குகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com