இலங்கை அணிக்கெதிரான முதலாவது டி20 கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் சிறிது அதிரடி காட்டினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷிகர் தவான், 46 ரன்னில் ஆட்டமிழந்தார். எதிர் திசையில் நிலைத்து நின்ற சூர்ய குமார் யாதவ் அரைசதம் அடித்து அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு இந்திய அணி 164 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணியில் சரீத் அஷ்லங்கா அதிரடியாக விளையாடி 44 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 19-வது ஓவரில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் 4 விக்கெட்களை கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.