பாராலிம்பிக்: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம்

பாராலிம்பிக்: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம்
பாராலிம்பிக்: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் பிரமோத் பகத் தங்க பதக்கமும், மனோஜ் சர்கார் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்திருக்கின்றனர்.

டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்தவர் 33 வயதான பிரமோத் பகத். இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் பிரமோத் வீழ்த்தினார். இது இந்தியாவிற்கு கிடைத்துள்ள 4 வது தங்கம்.

அதேபோல், பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்திருக்கிறது. இந்திய வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலம் வென்றிருக்கிறார். அரையிறுதியில் தோல்வியடைந்த நிலையில், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மனோஜ் சர்கார் வெண்கலம் வென்றார். இவர் ஜப்பான் வீரர் டைசுகேவை 20-22, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.

இத்துடன் இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என வென்றுள்ளது. பதக்கங்கள் எண்ணிக்கை 17ஆக உயர்ந்திருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com