'ஒரே நாளில் 4 தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்'
ஒடிசாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் 4 தங்கம் வென்று
சாதனை படைத்துள்ளனர்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா,
சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார், 400 மீட்டர்
ஓட்டப்பந்தயத்தில் கேரள வீரர் முகமது அனாஸ், மகளிர் பிரிவிற்கான 400 மீட்டர் ஓட்டபந்தயத்தில் நிர்மலா செரோனும், 1,500 மீட்டர்
ஓட்டத்தில் சித்ராவும் தங்கம் வென்று சாதனை படைத்தனர். மேலும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் ஆரோக்கியா
வெள்ளியும், ஜிஸ்னா மேத்யூ வெண்கலமும் வென்றனர். இதன்மூலம், இந்திய வீரர்கள் நேற்று ஒரே நாளில் 4 தங்கம், ஒரு வெள்ளி
மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

