‘சைனாமேன்’ ஹாட்ரிக் விக்கெட்: 2வது போட்டியிலும் இந்தியா வெற்றி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 50 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடர்ன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 92 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சென்றாலும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். பின்னர் அவரும் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியாவின் அபார பந்து வீச்சில் 202 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டது. இந்திய பந்துவீச்சாளர்களில் ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்தார். இதன்மூலம் 50 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.