இந்தியா 3 ரன்னில் த்ரில் வெற்றி - கடைசி வரை பயம்காட்டிய வெஸ்ட் இண்டீஸ்!

இந்தியா 3 ரன்னில் த்ரில் வெற்றி - கடைசி வரை பயம்காட்டிய வெஸ்ட் இண்டீஸ்!
இந்தியா 3 ரன்னில் த்ரில் வெற்றி - கடைசி வரை பயம்காட்டிய வெஸ்ட் இண்டீஸ்!

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் ஷிகர் தவானும் சுப்மான் கில்லும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே கில் அதிரடியாக ஆட, கேப்டன் பொறுப்பை சுமக்கும் தவால் பொறுப்பாக பொறுமையாக ஆடினார். ஏதுவான பந்துகளை இந்த கூட்டணி எல்லைக் கோட்டுக்கு விரட்ட ஸ்கோர் சீராக உயர்ந்து வந்தது. கில் அதிரடியாக சதம் கடந்த நிலையில் பூரானிடம் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஸ்ரேயாஸ் உடன் இணை சேர்ந்த தவான் அரைசதம் கடந்து அசத்தினார்.

சதம் நோக்கி அற்புதமாக விளையாடி வந்த 97 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அடுத்து சூர்யகுமார் யாதவ் உடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ்-உம் அரைசதம் கடந்தார். ஆனால் அவரது விக்கெட் பறிபோனது இந்திய அணியில் மிடில் ஆர்டர் தடுமாறத் துவங்கியது. 13 ரன்களில் சூர்யகுமார். 12 ரன்களில் சஞ்சு சாம்சன் என தொடர்ந்து விக்கெட் பறிபோக, விறுவிறுவென ஏறிவந்த இந்திய அணியின் ஸ்கோர் மந்தமாக உயரத் துவங்கியது. ஆனாலும் தீபக் ஹூடா, அக்ஸர் படேல் ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை சேர்த்தது இந்தியா.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்களாக ஷை ஹோப், கைல் மேயர்ஸ் களமிறங்கினர். இதில் 7 ரன்களில் அவுட்டாகி ஹோப் அதிர்ச்சியளித்தார். ஆனால் மேயர்ஸ் உடன் ஜோடி சேர்ந்த புரூக்ஸ் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் புரூக்ஸ் 46 ரன்னில் அவுட்டானார். ஆனால் தொடர்ந்து அதிரடி காட்டிய மேயர்ஸ் 75 ரன்களில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்டானார். இதன் பின்பு வந்த பிராண்டன் கிங் அதிரடி காட்டி 54 ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் 252 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வெஸ்ட் இண்டீஸ்.

ஆனால் 7 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அகேல் ஹூசைன், ஷெபர்ட் ஜோடி இந்திய பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர். இருவரும் டார்கெட் நோக்கி வேகமாக முன்னேற தொடங்கினர். ஆனாலும் 50 ஓவர் முடிவில் அந்த அணியால் 305 ரன்களையே எட்ட முடிந்தது. வெற்றிப்பெற கடுமையாக போராடிய ஹூசைன் 32 ரன்களும், ஷெபர்ட் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 3 ரன்களில் வெற்றிப்பெற்றது. இந்தியத் தரப்பில் சிராஜ், தாக்கூர், சஹால் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com