தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை !

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை !

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை !
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் தொடரை 3-0 என வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதித்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா ஏற்கெனவே 2 ஆட்டங்களை வென்று விட்டது. கடைசி ஆட்டம் நேற்று நடந்தது.

முதலில் ஆடிய இந்தியா 45.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்மன்ப்ரீத் கெளர் 38, ஷிகா பாண்டே 35 ரன்களை சேர்த்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் மார்ஸேன்கேப் 3, ஷப்னிம், அயபோங்கா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 48 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் சுன்ல்ஸ் 24, மாரிஸேன் 29 ரன்களை சேர்த்தனர். இந்திய தரப்பில் ஏக்தா பிஷ்ட் 3, தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா  ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ஏக்தா பிஷ்ட் ஆட்டநாயகியாகவும், தென்னாப்பிரிக்காவின் மாரிஸேன் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய மகளிர் அணியின் வெற்றியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com