2023 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு! ஹர்மன்ப்ரீத் கேப்டனாக நியமனம்

2023 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு! ஹர்மன்ப்ரீத் கேப்டனாக நியமனம்

2023 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு! ஹர்மன்ப்ரீத் கேப்டனாக நியமனம்
Published on

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் 2023ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பைக்கு ஹர்மன்ப்ரீத் தலைமையிலான 15பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளிலும் ஐந்து ஐந்து அணிகள் பங்குபெற்று விளையாடவிருக்கின்றன. குரூப் பி பிரிவில் பங்குபெற்று இருக்கும் இந்திய அணியில் 4 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்திய அணி இருக்கும் பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டிஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதல்!

பிப்ரவரி 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தனது முதல் போட்டியை ஆடவிருக்கும் இந்திய அணி, முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணியுடன் மோதவிருக்கிறது. போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற 3 போட்டிகளில் வெஸ்ட் இண்டிஸ், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளோடு மோதவிருக்கிறது.

டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி!

ஆல்ரவுண்டர் ஹர்மன்ப்ரீத் கார் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 18 வயது நிரம்பிய ஷபாலி வர்மாவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே 14 மாத இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா (Wk), ரிச்சா கோஷ் (Wk) ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி வஸ்த்ரகர் (உடற்தகுதிக்கு உட்பட்டது), ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே

பேக்கப் வீரர்கள்: சப்பினேனி மேகனா, சினே ராணா, மேக்னா சிங்

முதல் முறையாக நடைபெறவிருக்கும் யூ-19 டி20 உலகக்கோப்பை!

ஜனவரி மாதம் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இடையேயான உலகக்கோப்பை முதல் முறையாக நடைபெறவிருக்கின்றது. 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு இந்திய அணியின் அதிரடி வீராங்கனையான ஷபாலி வர்மா கேப்டனாக நிமியக்கப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் முழுவதும் இந்த உலகக்க்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com