கபடி உலகக்கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி
கபடி உலகக்கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணிweb

மகளிர் கபடி உலகக் கோப்பை.. உலக சாம்பியனாக சாதனை படைத்த இந்திய அணி!

மகளிர் கபடி உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி..
Published on

மகளிர் கபடி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் 2025 மகளிர் கபடி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன. 11 நாடுகளின் அணிகள் பங்கேற்றன.

13ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகுநடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா-சீனா தைபே அணிகள் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் சீனா தைபே அணியை 35–28 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இந்திய அணியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா செல்வராஜ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com