ஷாட்கன் ஆடவர் உலகக்கோப்பை: இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்
ஆண்களுக்கான ஷாட்கன் உலகக்கோப்பையின் தங்கப் பதக்கம் வெல்வதற்கான இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி குவைத் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை பெற்றது.
சைப்ரஸின் நிகோசியாவில் ஷாட்கன் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்திய ஆடவர் அணி போலந்து, துருக்கி அணிகளைப் பின்னுக்குத் தள்ளி வெள்ளிப் பதக்கம் வென்றது. பிருத்விராஜ் தொண்டைமான், விவான் கபூர் மற்றும் ஜோரவர் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 214 புள்ளிகளைக் குவித்தது. ஆனால் குவைத் அணி இந்தியாவை விட வெறும் 3 புள்ளிகள் மட்டும் அதிகம் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஆனால் போலந்து, துருக்கி அணிகளை விட அதிக புள்ளிகள் பெற்றதால் இந்தியா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. மூன்றாவது இடத்தை பிடித்த போலந்து அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. 208 புள்ளிகளை போலந்து அணி பெற்றிருந்தது. 4 வது இடத்தை 207 புள்ளிகளுடன் துருக்கி அணி பிடித்தது.