காமன்வெல்த் போட்டியில் மேலும் ஒரு தங்கத்தை தட்டியது இந்தியா
இந்திய வீரர் ஜிட்டு ராய் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.
21ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்ட் மாகாணத்தின் கோல்ட்கோஸ்ட் நகரில் பெற்று வருகிறது. ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6.600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 227 பேர் கொண்ட இந்திய அணி 8 தங்க பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடு போட்டியில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஜீது ராய் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதேபோட்டியில் மற்றொரு இந்திய வீரர் ஓம் மித்தர்வால் வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா 17 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதில் 8 தங்கப் பதக்கமும், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் அடங்கும்.
இந்தப் போட்டிகளில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை மேஹுலி கோஷ் வெள்ளி பதக்கத்தையும் அபுர்வி சண்டேலா வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.