3 வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

3 வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

3 வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை ஆஸ்தி ரேலிய அணி கைப்பற்றியது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில், கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 3 வது போட்டி, ராஞ்சியில் இன்று நடக்கிறது.

 இதிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் உள்ளனர். போட்டி நடக்கும் ராஞ்சி, தோனிக்கு சொந்த ஊர். சொந்த மண்ணில் அவர் ஆடும் கடைசி சர்வதேச போட்டி. அதனால் அவர் அதிரடி ஆட்டத்தை இங்கு வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலா ம். இதற்கிடையே, தோனியை கவுரவிக்கும் விதமாக, ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம், ராஞ்சி மைதானத்தின் தெற்கு ஸ்டாண்டுக்கு அவரது பெய ரைச் சூட்டியுள்ளது.

இந்திய அணியில் மாற்றம் இல்லை. முந்தைய போட்டியில் விளையாடிய வீரர்களே பங்கேற்கின்றனர். இதற்கிடையே, டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அணி விவரம்:
இந்திய அணி:
விராத் கோலி (கேப்டன்), ரோகித், தவான், ராயுடு, விஜய் சங்கர், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஜடேஜா, குல்தீப், முகமது ஷமி, பும்ரா.

ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் பின்ச் (கேப்டன்), கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஸ்டோயினிஸ், கேரி, கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், லியான், ஜம்பா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com