"ஆஸியுடனான அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா தோல்வியடையும்" - மைக்கல் வாகன்

"ஆஸியுடனான அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா தோல்வியடையும்" - மைக்கல் வாகன்

"ஆஸியுடனான அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா தோல்வியடையும்" - மைக்கல் வாகன்
Published on

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்தியா அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடையும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கு இடையே 2 ஆவது போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்தப் போட்டி குறித்து மைக்கல் வாகன் கூறும்போது " கடந்த 9 மாதங்களில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய இந்திய அணி சிறந்த முறையில் இல்லை. அவர்கள் பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டு கொடுத்தனர். பீல்டிங்கில் சோபிக்கவில்லை. அதிரடியாக விளையாடினாலும், பேட்டிங்கில் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை" என்றார்.

மேலும் "ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியபோதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஓரணியாக இந்திய வீரர்களால் திரும்ப முடியவில்லை. சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி பழைய பள்ளிக்கூடம் போல் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்றே நினைக்கிறேன்" என்றார் மைக்கல் வாகன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com