இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், நடந்து வருகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனால் மூன்றாவது போட்டியில் மூத்த வீரர்கள் சிலருக்கு ஒய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகளை பொறுத்தமட்டில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் அந்த அணி களமிறங்குகிறது.
கயானா நகரில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், ராகுல் சாஹர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரோகித் ஷ்ரமாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.