இன்று 2-வது டெஸ்ட்: அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இன்று 2-வது டெஸ்ட்: அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இன்று 2-வது டெஸ்ட்: அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே இப்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதலாவது டெஸ்டில் இந்திய அணி, 318 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் இன்று நடக்கிறது.

முதல் போட்டியில் ரஹானே சதம் அடித்தார். விராத் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் விளாசினர். பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா, பும்ரா மிரட்டினர். குறிப்பாக 2-வது இன்னிங்சில் பும்ரா, 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜா பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டதால், அனுபவ வீரர் அஸ்வினுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்புக் கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்த போட்டியில் ஆடிய வீரர்களே இன்றைய போட்டியிலும் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. 

விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். இருந்தாலும் அவருக்குத்தான் இன்றைய போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படும். 

வெஸ்ட் இண்டீஸ் அணியில், பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகிறார்கள். முதலாவது டெஸ்டில் ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதத்தை எடுக்கவில்லை. இன்றைய போட்டியில் அவர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு சவால் கொடுக்க முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்ரியல், கெமர் ரோச் ஆகியோரின் சிறப்பாக வீசுகின்றனர். இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்றைய போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளது.

இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது என்பதால், முதலாவது டெஸ்ட் வெற்றியால் 60 புள்ளிகளை குவித்த இந்திய அணி, இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று 60 புள்ளிகளை சேர்க்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com