ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றம் இருக்குமா?

ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றம் இருக்குமா?
ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? வெஸ்ட் இண்டீஸ்  அணியில் மாற்றம் இருக்குமா?

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியை 176 ரன்னில் சுருட்டிய இந்திய அணி, அந்த இலக்கை 28 ஓவர்களில் எட்டியது. முதல் போட்டியில் யுவேந்திர சாஹலும், வாஷிங்டன் சுந்தரும் கூட்டாக 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 1000-வது ஒருநாள் போட்டியில் வென்ற அதே உற்சாகத்துடன் களமிறங்குகிறது. முதல் ஆட்டத்தில் விளையாடாத கே.எல்.ராகுல் முழு உடல்தகுதியுடன் களமிறங்கத் தயாராகி இருப்பதால் இஷான் கிஷனுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், யுவேவேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

மேற்கிந்திய தீவுகள் : ஷாய் ஹோப், பிரான்டன் கிங், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், நிகோலஸ் பூரன், பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், அகேல் ஹூசைன், பாபியன் ஆலென், அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com