முதல் டி20 போட்டி : இந்திய அணிக்கு 96 ரன் இலக்கு

முதல் டி20 போட்டி : இந்திய அணிக்கு 96 ரன் இலக்கு

முதல் டி20 போட்டி : இந்திய அணிக்கு 96 ரன் இலக்கு
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியாவுக்கு 96 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அமெரிக்காவின் லவுடர்ஹில்லில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே தொடக்க வீரர் சாம்பெல் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து லெவிஸ், ஹெட்மயர் இருவரும் டக் அவுட் ஆனார்கள். சற்று நேரம் தாக்குப்பிடித்த நிக்கோலஸ் பூராண் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர், பொல்லார்டு ஒரு முனையில் நிதானமாக விளையாட மறுமுனையில் விக்கெட் சரிந்தன. பவெல்(4), பிராத்வெயிட்(9), சுனில் நரின் (2) என வந்த வேகத்தில் நடையை கட்டினர். ஒரு கட்டத்தில் சிக்ஸர்களாக விளாசிய பொல்லார்டு ஒரு ரன்னில் அரைசதத்தை நழுவவிட்டார். 49 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். அவர் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசினார். 

20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சைனி 3, புவனேஸ்வர் குமார் 2 விக்கெட் எடுத்தனர்.  96 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் இந்திய அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com