“எல்லா வீரர்களையும் திருப்திபடுத்த நினைக்காதீர்கள்” - கங்குலி காட்டம்

“எல்லா வீரர்களையும் திருப்திபடுத்த நினைக்காதீர்கள்” - கங்குலி காட்டம்
“எல்லா வீரர்களையும் திருப்திபடுத்த நினைக்காதீர்கள்” - கங்குலி காட்டம்
Published on

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் இடம்பெறாததற்கும், ஒருநாள் அணியில் ரகானே சேர்க்கப்படாததற்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் 2 டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் ஆகஸ்ட் 3, மற்றும் 4 ஆம் தேதிகளில் நடக்கிறது. கடைசி டி20 போட்டியில் இருந்து மற்ற ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தன்னுடைய ட்விட்டரில், “இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் ஒரே வீரரை மூன்று வகையானப் போட்டிக்கு தேர்வு செய்ய வேண்டிய நேரம் இது. அப்போதுதான் ஒத்த உணர்வும், தன்னம்பிக்கையும் இருக்கும். சில வீரர்களே அனைத்துப் போட்டிகளில் விளையாடுகிறார்கள். சிறந்த அணிகள் ஒரே மாதிரியான வீரர்களை தொடர்ச்சியாக கொண்டிருக்கும். எல்லா வீரர்களையும் திருப்தி படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. இந்திய அணிக்கு எது சிறந்ததோ அதனைதான் செய்ய வேண்டும். 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடக் கூடிய வீரர்கள் நிறையவே இருக்கிறார்கள். சுப்கன் கில் அணியில் இடம்பெறாதது ஆச்சர்யமாக உள்ளது. அதேபோல், ரகானே ஒருநாள் அணியில் இடம்பெறாதது ஆச்சர்யமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

டி20 தொடருக்கான அணி:

விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட், குணால் பாண்ட்யா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

ஒரு நாள் தொடருக்கான அணி: 

விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

டெஸ்ட் அணி:

விராத் கோலி (கேப்டன்), ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், விருத்திமன் சாஹா, ஆர்.அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com