“பதட்டமான தருணங்களில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்” - ஸ்ரேயாஸ்
நெருக்கடியான நேரங்களில் பேட்டிங் செய்ய விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் விராத் கோலி 114 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும் எடுத்தனர்.
போட்டிக்குப் பின் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஓய்வு அறையில் எல்லோரும் பதட்டமாக இருக்கும் இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். ஆட்டத்தின் போக்கு எந்தவொரு மாற்றத்தையும் உருவாக்கும்” என்று கூறினார்.
விராட் கோலி கூறும்போது, ’’போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து ஸ்ரேயாஸ் ஆடியவிதம் அருமையாக இருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் துணிச்சலாக அவர் ஆடினார். அவரது ஆட்டத்தில் அவர் உறுதியாக இருந்தார். தொடர்ந்து அணிக்காக அவர் சிறப்பாக ஆடுவது நம்பிக்கை அளிக்கிறது” என்றார்.