\
சிவம் அதிரடி அரை சதம் : இந்திய அணி 170 ரன்கள் குவிப்பு

சிவம் அதிரடி அரை சதம் : இந்திய அணி 170 ரன்கள் குவிப்பு

சிவம் அதிரடி அரை சதம் : இந்திய அணி 170 ரன்கள் குவிப்பு
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் குவித்ததுள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

முதலில் களமிறங்கிய கே.எல்.ராகுல் 11 (11) மற்றும் ரோகித் ஷர்மா 15 (18) ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த சிவம் டூபே மற்றும் கேப்டன் கோலி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய சிவம் அரை சதம் விளாசினார்.

அதைத்தொடர்ந்து 54 (30) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் விராட் கோலியும் 19 (17) ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டு இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தனர்.  ரிஷாப் பண்ட் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வில்லியம்ஸ், வால்ஸ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com