கிரிக்கெட் நேரலையின் போது விவியன் ரிச்சர்ட்ஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

கிரிக்கெட் நேரலையின் போது விவியன் ரிச்சர்ட்ஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

கிரிக்கெட் நேரலையின் போது விவியன் ரிச்சர்ட்ஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு!
Published on

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் போது, டிவி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நேற்று தொடங்கியது. அப்போது, ஆட்டத்துக்கு முந்தைய டி.வி.நேரலை நிகழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கலந்துகொண்டார்.

பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

சில மணி நேரத்துக்குப் பின், நேரலை நிகழ்ச்சிக்குத் திரும்பிய அவர், ’உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களே நன்றி. குணமாகி விட்டேன். எனக்கு எந்த பிரச்னையுமில்லை’ என்று தெரிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com