விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டி எங்கு நடைபெற இருக்கிறது?

விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டி எங்கு நடைபெற இருக்கிறது?
விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டி எங்கு நடைபெற இருக்கிறது?

விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை பெங்களூருவில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. இதனிடையே  இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற இருந்த டெஸ்ட் தொடரை கடைசியாக நடத்த வேண்டுமென இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ முதலில் டி20 தொடரையும் அதன்பின் டெஸ்ட் தொடரையும் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி கடைசியாக நடைபெற இருந்த டி20 தொடர் முதலில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி லக்னோவில் துவங்க உள்ளது. அதை தொடர்ந்து நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் வரும் மார்ச் 3ஆம் தேதியும் 2வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்று அறிவிப்பால் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை பெங்களூருவில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையின்படி தனது 100ஆவது போட்டியை பெங்களூருவில் விளையாட இருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருவதால் பெங்களூருவில் விராட் கோலிக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அத்தகைய ரசிகர்களுக்கு முன்னிலையில் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடவிருந்த சூழலில் இந்த மாற்று அறிவிப்பால் விராட் கோலி அந்த முக்கியமான போட்டியை பெங்களூருவில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

இதையும் படிக்க: ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றம் இருக்குமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com