தொடரை வெல்லப்போவது யார்? கடைசி டி20 போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

தொடரை வெல்லப்போவது யார்? கடைசி டி20 போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

தொடரை வெல்லப்போவது யார்? கடைசி டி20 போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
Published on

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டி-20 போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 டி-20 போட்டி ராஜ்கோட் நகரில் இன்று இரவு நடைபெற உள்ளது.

புனேயில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் படுமோசமாக இருந்தது. அனுபவமற்ற இளம் வீரர்கள் கொண்ட அணியில்  இது போன்று நடக்கத் தான் செய்யும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இன்றைய ஆட்டத்தில் இளம் வீரர்கள் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. இன்றையப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சரியாக சோபிக்காத நிலையில், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் அணிக்கு கைக்கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அணியின் வெற்றிக்கு உதவ முடியும்.

தவற விடாதீர்: கம்பேக்னா இப்படி இருக்கணும்.. 4 வருடத்திற்கு பின் களமிறங்கி தொடர்நாயகன் ஆன சர்பராஸ் அகமது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com