விளையாட்டு
இலங்கையுடன் இன்று 2-வது டெஸ்ட்: தொடக்க வீரராக களமிறங்குகிறார் ராகுல்
இலங்கையுடன் இன்று 2-வது டெஸ்ட்: தொடக்க வீரராக களமிறங்குகிறார் ராகுல்
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்குகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக முதல் டெஸ்ட்டில் விளையாடாத தொடக்க வீரர் ராகுல் இரண்டாவது டெஸ்ட்டில் களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியில் காய்ச்சலால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத கேப்டன் தினேஷ் சண்டிமால், இன்றைய போட்டியில் விளையாடுகிறார். அதேபோல் முதல் போட்டியின்போது காயத்தால் விலகிய குணரத்னேவுக்குப் பதில், திரிமன்னே சேர்க்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.