\
தொடர் தோல்வி: கேப்டன் பொறுப்பில் இருந்து உபுல் தரங்கா நீக்கம்

தொடர் தோல்வி: கேப்டன் பொறுப்பில் இருந்து உபுல் தரங்கா நீக்கம்

தொடர் தோல்வி: கேப்டன் பொறுப்பில் இருந்து உபுல் தரங்கா நீக்கம்
Published on

ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து உபுல் தரங்கா நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் ஒரு நாள்  போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து உபுல் தரங்கா நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியுடனான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஆல்ரவுண்டர் திஷாரா பெரரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 28 வயதாகும் திஷாரா பெரரா இலங்கை அணிக்காக 125 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

உபுல் தரங்கா கேப்டனாக பதவியேற்ற பின் இலங்கை அணி தொடர்ந்து சரிவை சந்தித்தது. இந்த வருடம் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்களில் இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி விளையாடுகிறது. முதல் போட்டி வரும் 10ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com