விளையாட்டு
தொடரை தீர்மானிக்கும் 3-வது போட்டி: இந்திய-இலங்கை நாளை மோதல்
தொடரை தீர்மானிக்கும் 3-வது போட்டி: இந்திய-இலங்கை நாளை மோதல்
தொடரை தீர்மானிக்கும் இந்திய-இலங்கை அணிகள் விளையாடும் 3-வது ஒரு நாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறுகிறது.
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. விசாகபட்டினத்தில் நடைபெறும் இந்தப்போட்டி மதியம் ஒன்றரை மணியளவில் தொடங்குகிறது. இரு அணிகளும், வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டியாக உள்ளது. இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள உத்வேத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே வேளையில் இந்தியாவில் முதன்முறையாக தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இலங்கை அணி உள்ளது. இதனால் மூன்றாவது போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.