இலங்கையை பந்தாடிய இந்தியா - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இலங்கையை பந்தாடிய இந்தியா - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
இலங்கையை பந்தாடிய இந்தியா - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதல் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர்களான தனுஷ்கா குனதிலக 20 (21) மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 22 (16) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வத குஷால் பெராரா 34 (28) ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 142 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ஷர்துல் தகூர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இலக்கை எதிர்த்து விளையாடி இந்திய அணியில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அதிரடி காட்டினார். மற்றொரு புறம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணிக்குள் வந்திருக்கும் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 (29) ரன்கள் எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் 45 (32) ரன்னில் அவுட் ஆகி அரை சதத்தை தவறவிட்டார்.

பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேப்டன் கோலி பொறுப்புடன் ஆடி வெற்றியை நெருங்கினர். 34 (26) ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் விக்கெட்டை இழந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காத கோலி, 17 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். இந்திய அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 10ம் தேதி புனேவில் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com