மொகாலி டெஸ்ட்: பவுலிங்கிலும் மிரட்டிய ஜடேஜா - பரிதாப நிலையில் இலங்கை

மொகாலி டெஸ்ட்: பவுலிங்கிலும் மிரட்டிய ஜடேஜா - பரிதாப நிலையில் இலங்கை
மொகாலி டெஸ்ட்:  பவுலிங்கிலும் மிரட்டிய ஜடேஜா - பரிதாப நிலையில் இலங்கை

இலங்கை அணி 174 ரன்களில் சுருண்டு ‘பாலோ–ஆன்’ ஆகியுள்ளது. ஜடேஜா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி இந்திய அணி 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.  ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி 175 ரன்களை விளாசினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை, 2-வது நாள் ஆட்ட நேர முடிவில்,  108/4 ரன்களை சோ்த்திருந்தது. 3-வது நாளான இன்று இலங்கை அணி 65 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 174 ரன்களில் சுருண்டு ‘பாலோ–ஆன்’ ஆகியுள்ளது. ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்த நிலையில், அதே முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து 390 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தொடர்ந்து 2–வது இன்னிங்சை விளையாடி வருகிறது. மதிய உணவு இடைவேளை முன்புவரை இலங்கை அணி  4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு  10 ரன்கள் சேர்த்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் லகிரு திரிமான்ன டக் அவுட் ஆனார்.

இதையும் படிக்க:  "98ல நடந்ததா சொல்றாங்க சார்" சென்னையில் நடந்த ஷேன் வார்ன் Vs சச்சின்-ஒரு சுவாரஸ்ய பின்னணி

 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com