\
இந்தியா - இலங்கை முதல் டி20 - களநிலவரம் என்ன ?

இந்தியா - இலங்கை முதல் டி20 - களநிலவரம் என்ன ?

இந்தியா - இலங்கை முதல் டி20 - களநிலவரம் என்ன ?
Published on: 

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் இந்தியா - இலங்கை இடையே நடைபெறவுள்ளன. இதில் முதல் டி20 போட்டி இன்று அசாமில் உள்ள கவகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வருகை தந்திருக்கிறார். அத்துடன் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவானும் காயத்திற்குப் பின்னர் அணிக்குள் வந்துள்ளார். அத்துடன் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்கலாம் எனப்படுகிறது. அத்துடன் அசாமில் பனிப்பொழிவு மிகுதியாக இருப்பதால், இரண்டாவது பேட்டிங்கின் போது பந்துகள் பவுலர்கள் பிடித்து வீசுவதற்கு கடினமாக இருக்கும். கையில் இருந்து நலுவிச் செல்லும். பீல்டர்கள் பந்தினை பிடிப்பது கடினமாக இருக்கும். எனவே இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் டாஸ் வென்றால், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com