இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி தொடங்குவது மழையால் தாமதமாகியுள்ளது.
இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் இந்தியா - இலங்கை இடையே நடைபெறுகின்றன. இதில் முதல் டி20 போட்டி இன்று அசாமில் உள்ள கவுகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்கயிருந்தது. இதற்கான டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்துவீச்சை தேர்வு செய்தது குறித்து பேசிய விராட் கோலி, பந்துவீச்சாளர்களை நம்பி முதலில் பவுலிங்கை தேர்வு செய்ததாக கூறினார்.
இந்நிலையில் கவுகாத்தியில் பெய்த மிதமான மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை நின்றிருப்பதால் மைதனாத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவர்கள் குறைக்கப்படுவது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.