இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் இந்தியா - இலங்கை இடையே நடைபெறுகின்றன. இதில் முதல் டி20 போட்டி இன்று அசாமில் உள்ள கவுகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்கயிருந்தது. இதற்கான டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கவுகாத்தியில் பெய்த மிதமான மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் மழை நின்றதால், மைதனாத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தன. ஆனால் மீண்டும் மழை தொடர்ந்ததால், போட்டி மேலும் தாமதமானது. இவ்வாறாக இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக போட்டி தொடங்கமால் இருந்தது. இதையடுத்து மீண்டும் மழை நின்றதால், 9,30 மணிக்கு மேல் போட்டி தொடங்கும் என்றும், 5 ஓவர்கள் போட்டியாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மழை வந்ததால், போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.