விளையாட்டு
இந்தியா உடனான 20 ஓவர் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு
இந்தியா உடனான 20 ஓவர் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு
இந்திய அணி உடனான இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை அணி, 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வரும் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள தொடரில் பங்கேற்கும் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அனுபவ வீரர் மேத்யூஸ், குசால் பெரேரா, உதானா, தனன்ஜெய-டி-சில்வா உள்ளிட்ட 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை அணி விவரம்: லசித் மலிங்கா, தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்ணான்டோ, ஏஞ்சலோ மாத்யூஸ். தசுன் ஷனகா, குசால் பெரேரா, நிரகோஷன் டிக்வெல்லா, தனஞ்சஜயா டி சில்வா, இசுசு உதானா, பனுகா ராஜபக்சா, ஒஷாடா பெர்ணான்டோ, வனிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, குசால் மென்டிஸ், லக்ஷன் சன்டாகன், கசுன் ரஜித்தா.