மிகவும் மோசமானது ஜோகன்னஸ்பர்க் பிட்ச்: ஐசிசி எச்சரிக்கை

மிகவும் மோசமானது ஜோகன்னஸ்பர்க் பிட்ச்: ஐசிசி எச்சரிக்கை
மிகவும் மோசமானது ஜோகன்னஸ்பர்க் பிட்ச்: ஐசிசி எச்சரிக்கை

மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஜோகன்னஸ்பர்க் வாண்டெரர் மைதானத்தில் உள்ளது மோசமான பிட்ச் என்று ஐசிசி கூறியுள்ளது. 

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மட்டும் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியின் போதே பிட்ச் குறித்த சர்ச்சை எழுந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவே பிட்ச் தயார் செய்யப்பட்டு இருந்தது. டெஸ்ட் தொடர் முழுவதும் இரு அணி வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.  கேப்-டன், செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விட ஜோகன்னஸ்பெர்க் போட்டியில் பிட்ச் குறித்த விமர்சனம் கடுமையாக இருந்தது.

வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் காயங்களுடன் திரும்பினர். விராட் கோலி, எல்கர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கே அடி விழுந்தது. பந்து தாருமாறாக எகிறியது. இதனால், 4-ம் நாள் ஆட்டத்தை நிறுத்தும் அளவிற்கு சென்றது. இருப்பினும் போட்டி முழுமையாக ஆடப்பட்டது. 

இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க் வாண்டெரர் மைதானத்தில் உள்ளது மோசமான பிட்ச் என்று ஐசிசி கூறியுள்ளது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. வாண்டெரர் மைதானத்திற்கு 3 சிதைவு புள்ளிகள்(demerit points) வழங்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த தொடரில் மைதானம் 5 சிதைப்புள்ளிகளை எட்டுமானால் அடுத்த 12 மாதங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்படும் என்று ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. மொத்தம் 4 இன்னிங்சில் 296 ஓவர்கள் வீசப்பட்டு 805 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 40 விக்கெட்டுகளும் வீழ்ந்தன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com