தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் முடிந்தவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா படை டி20 உலகக்கோப்பை தொடருக்காக வரும் வாரத்தில் ஆஸ்திரேலியா செல்லவிருப்பதால், ஷிகர் தவான் தலைமையில் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரிலுள்ள வீரர்கள் யாரும் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, இஷான் கிஷான் ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராஜட் பட்டிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாஹர்.

இதையும் படிக்க: 'பும்ராவுக்கு மாற்று உலகில் யாரும் இல்லை' - ஷேன் வாட்சன் ஆரூடம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com