400-வது டி20 போட்டி: சாதனை பட்டியலில் இடம்பிடித்த ரோகித் சர்மா

400-வது டி20 போட்டி: சாதனை பட்டியலில் இடம்பிடித்த ரோகித் சர்மா
400-வது டி20 போட்டி: சாதனை பட்டியலில் இடம்பிடித்த ரோகித் சர்மா

இன்று நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டம் ரோகித் சர்மாவுக்கு 400-வது டி20 போட்டி ஆகும்.

கவுகாத்தியில் இன்று நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் 400 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா.

அதிக டி20 ஆட்டங்களை விளையாடிய இந்திய வீரர்களின் வரிசையில் ரோகித் சர்மா ஏற்கனவே முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது அவர் 400 டி20 போட்டிகள் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் 350 போட்டிகளுக்கு மேல் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் ரோகித் சர்மா (400), தினேஷ் கார்த்திக் (368), விராட் கோலி (353) மற்றும் எம்எஸ் தோனி (361) ஆகியோர் மட்டுமே உள்ளனர். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் சர்மா சமீபத்தில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் அதிக டி20 ஆட்டங்களை விளையாடிய வீரர்களின் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் கீரோன் பொல்லார்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 614 டி20 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டுவைன் பிராவோ 556 போட்டிகளுடன் 2வது இடத்திலும், பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷோயப் மாலிக் 481 போட்டிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிக்க: 'பும்ராவுக்கு மாற்று உலகில் யாரும் இல்லை' - ஷேன் வாட்சன் ஆரூடம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com