"அவர்களது வார்த்தைகளை நம்பாதீர்கள்”.. வாய்ப்பு கிடைக்காதது குறித்து பிரித்வி ஷா வருத்தம்!

"அவர்களது வார்த்தைகளை நம்பாதீர்கள்”.. வாய்ப்பு கிடைக்காதது குறித்து பிரித்வி ஷா வருத்தம்!

"அவர்களது வார்த்தைகளை நம்பாதீர்கள்”.. வாய்ப்பு கிடைக்காதது குறித்து பிரித்வி ஷா வருத்தம்!
Published on

இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் பிரித்வி ஷா இந்த தொடரிலும்  இடம்பெறவில்லை.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொடரில் இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் விளையாடுகிறது. இளம் வீரர்களுக்கு இதில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முகேஷ் குமார் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமாக தேர்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் பிரித்வி ஷா இந்த தொடரிலும்  இடம்பெறவில்லை. அந்த விரக்தியில் பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வார்த்தைகளை நம்பாதீர்கள், அவர்களின் செயல்பாடுகளை நம்புங்கள்; வார்த்தைகள் ஏன் அர்த்தமற்றவை என்பதை செயல்களே நிரூபிக்கும்" என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் .

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதற்காக பிரித்வி ஷாவுக்கு கடந்த 2019இல் 8 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டது. தடைக் காலம் நிறைவடைந்த பின்னரும் அவர் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்படவில்லை. பிரித்வி ஷா இந்திய அணிக்காக 5 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'பும்ராவுக்கு மாற்று உலகில் யாரும் இல்லை' - ஷேன் வாட்சன் ஆரூடம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com