'சொதப்போ சொதப்பல்' - ரன் சேர்க்க திணறும் கே.எல். ராகுல் மீது ரசிகர்கள் கோபம்!

'சொதப்போ சொதப்பல்' - ரன் சேர்க்க திணறும் கே.எல். ராகுல் மீது ரசிகர்கள் கோபம்!
'சொதப்போ சொதப்பல்' - ரன் சேர்க்க திணறும் கே.எல். ராகுல் மீது ரசிகர்கள் கோபம்!

இந்திய அணியின் தொடக்க வீரர் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து 3வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறார் கேஎல் ராகுல்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியிருந்த நிலையில், நேற்று நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி இன்னும் 15 முதல் 20 ரன்களைக் கூடுதலாக எடுத்திருந்தால் தென்னாப்பிரிக்கா அணி இலக்கை விரட்ட திண்டாடியிருக்கும். இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ரன்கள் குவித்தார். ஏனைய வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினர்.

குறிப்பாக சமீபகாலங்களில் சிறப்பாக செயல்படாத கேஎல் ராகுல் மீண்டும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் 4 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 9 ரன்கள் என ஆட்டமிழந்த ராகுல், நேற்றைய ஆட்டத்திலும் 14 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். இந்திய அணியின் தொடக்க வீரர் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து 3வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறார் கேஎல் ராகுல்.

இப்படி சொதப்பலாக பேட்டிங் செய்யும் போக்குக்கு முடிவே கிடையாதா என்று சமூக வலைதளங்களில் உணர்ச்சிவசப்படும் ரசிகர்கள், அடுத்து வரும் ஆட்டங்களிலாவது ராகுலை அதிரடியாக நீக்குமாறு கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணியில் தற்போது சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பேட்டிங்கில் சொதப்பி வரும் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் அதில் முக்கியமானவராக உள்ளார். நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அணி அடுத்து மோதும் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் ராகுலை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: IND Vs SA டி20 உலகக்கோப்பை: வீணானது சூரியகுமாரின் அதிரடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com