மீண்டும் சதம் அடித்து அசத்திய கோலி

மீண்டும் சதம் அடித்து அசத்திய கோலி

மீண்டும் சதம் அடித்து அசத்திய கோலி
Published on

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்துள்ளார். 

கேப்டவுனில் நடைபெறும் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலியும், ஷிகார் தவானும் இணைந்து சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடி பதற்றமே இல்லாமல் ரன்களை சேர்த்தது. 

ஷிகார் தவான் 76 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ரகானே 11, பாண்ட்யா 14, தோனி 10 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பொறுப்பாக விளையாடிய கேப்டன் கோலி தனது 34வது சதத்தை பதிவு செய்தார். 42 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 230 ரன்கள் எடுத்திருந்தது. மிடில் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கோலி மட்டும் தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com