தோனி திட்டியதற்கு பின்னால்..! - வைரலாகும் வீடியோ

தோனி திட்டியதற்கு பின்னால்..! - வைரலாகும் வீடியோ

தோனி திட்டியதற்கு பின்னால்..! - வைரலாகும் வீடியோ
Published on

மணிஷ் பாண்டேவை தோனி கோபத்தில் திட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மிஸ்டர் கூல் என்று அன்போடு அழைக்கப்படும் தோனி இப்படி கோபப்பட்டாரா என்று பலரும் ஆச்சரியத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். தோனி கோபத்தில் திட்டுவது போன்ற வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. முதலில், பகிரப்படும் அனைத்து வீடியோக்களிலும் தோனி கோபமாக பேசுவது போன்ற சில நொடிகள் ஓடக்கூடியது காட்சிகள் மட்டும்தான் உள்ளது. எப்பொழுதுமே ஒரு ரியாக்‌ஷன் போடும் போது, அதனை முழுமையாக பதிவு செய்ய வேண்டும். ஒரு சிக்ஸர் அடித்தாலும், விக்கெட் விழுந்தாலும் அது குறித்து வீடியோ பதிவு செய்யும் போது, பந்து போட்டத்தில் இருந்து அடிக்கப்பட்டது வரை அனைத்தும் அதில் இருக்கும். ஆனால், இதில் தோனி திட்டுவது மட்டும் உள்ளது. அதனால், தோனியின் கோபத்திற்கு பின்னாள் இருப்பது பலருக்கும் புரிவதில்லை. அதாவது தோனி ஏன் டென்ஷன் ஆனார் என்பது தெரியும்.

இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமானது. ஒன்று, வழக்கமாக தோனி ஓடி ரன் சேர்ப்பதில் கைதேர்ந்தவர். தோனிக்கு இணையாக ஓடி ரன் ஓடி எடுப்பவர்கள் இந்திய அணியில் வெகு சிலரே. தற்போது, விராட் கோலி மட்டுமே தோனிக்கு இணையாக ஓடி எடுப்பவராக உள்ளார். மற்றவர்கள் தடுமாறுவார்கள். அந்த அளவிற்கு வேகமானவர் தோனி. ஒரு ரன்னை இரண்டாகவும், இரண்டு ரன்னை சில நேரங்களில் மூன்றாகவும் மாற்றக் கூடியவர். அந்த வகையில் தான் மணிஷ் பாண்டே பந்தை அடித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் தோனி டென்ஷன் ஆகிவிட்டார். 

மற்றொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். எந்தவொரு பேட்ஸ்மேனை பொறுத்தவரையும், தான் விளையாட வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். 20வது ஓவரில் இது நடக்கிறது. கடைசி ஓவரின் முதல் பந்தை பாண்டே சந்திக்கிறார். அவர் அடித்து விட்டு ஓடுகிறார். மறு முனையில் உள்ள தோனி இரண்டாவது ரன் எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் பாண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார். ஒரு வேளை இரண்டு ரன்கள் ஓடினால் மீண்டும் பாண்டேதான் பேட்டிங் செய்வார். 2 ரன்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் தோனியின் எண்ணம், தான் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. 

தோனி டென்ஷன் ஆனதில் இந்திய அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. 19.1 ஓவரில் 171 ரன் தான் இந்திய அணி எடுத்தது. அடுத்த 5 பந்துகளில் தோனி 17 ரன்கள் பறக்கவிட்டார். இதனால் 20 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தோற்றுவிட்டது என்பதை விட்டு, தோனியின் அதிரடியான ஆட்டத்தை நீண்ட நாட்களுக்கு பின்பு கண்டதில் மகிழ்ச்சி என்று பலரும் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com