IND Vs SA: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா! தொடரை கைப்பற்றுமா இந்தியா?

IND Vs SA: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா! தொடரை கைப்பற்றுமா இந்தியா?

IND Vs SA: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
Published on

2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்கி உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி, முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். ஏனெனில் இதில் தோற்றால் இந்தியா தொடரை இழந்து விடும். அதனால் 2வது ஆட்டத்தில் வென்று பதிலடி தந்தால்தான் இந்தியா தொடரை சமநிலைக்கு கொண்டு வர முடியும்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி பந்துவீச தயாராகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com