தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : மயாங்க் அகர்வால் அசத்தல் சதம்

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : மயாங்க் அகர்வால் அசத்தல் சதம்

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : மயாங்க் அகர்வால் அசத்தல் சதம்
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் மயாங்க் அகர்வால் சதம் அடித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் ஷர்மா 14 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் பின்னர் வந்த புஜாராவுடன் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரை சதத்தை கடந்தனர். 

புஜாரா 58 (112) ரன்களில் விக்கெட்டை இழந்தார். நிலைத்து விளையாடிய மயாங்க் பவுண்டரி விளாசி தனது 2வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து 108 (195) ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த டெஸ்ட் போட்டியில் மயாங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்த நிலையில், இந்த டெஸ்ட்டிலும் தனது பேட்டிங் திறமையை பதிவு செய்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com