விளையாட்டு
ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்
ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி நாளை நடைபெற உள்ளது.
ஆசியக்கோப்பை ஹாக்கியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெறுகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஜப்பானையும், இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியையும் தோற்கடித்தது. பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் சமன் செய்தது.