'ஹர்திக் பாண்டியா உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்' - புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்

'ஹர்திக் பாண்டியா உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்' - புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்
'ஹர்திக் பாண்டியா உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்' - புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்

'ஹர்திக் பாண்டியா உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்' எனப் பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்.

நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதில் ஹர்திக் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 பந்தில் 33 ரன்கள் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் சிக்சர் அடித்து ஹர்திக் பாண்டியா அணியை வெற்றி பெற வைத்தார். சிறப்பாக பேட்டிங் செய்தது மட்டுமின்றி, 3 விக்கெட்டுகளை வீத்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் எனப் பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ''ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இதேபோல் நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால் ஒயிட்பால் கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக அவர் மாறுவார். தற்போது உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தான் என்று நான் கருதுகிறேன். அவர் 140+ கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். அனைத்து வித கிரிக்கெட்டிலும் அவர் இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கிறார்'' என்று கூறினார்.

ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை சுட்டிக்காட்டிப் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ''ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்தே மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியும் அவருக்கு நன்றாக அமைந்தது. அவரது பேட்டிங் திறமை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரியும். அணிக்கு திரும்பியதில் இருந்து அவர் பேட்டிங்கில் சிறப்பாக இருக்கிறார்'' என்று கூறினார்.

இதையும் படிக்க: வெற்றிக் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை ஏற்க மறுப்பு -சர்ச்சையில் ஜெய் ஷா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com