\
சானியா மிர்ஸா ஆதரவு யாருக்கு?

சானியா மிர்ஸா ஆதரவு யாருக்கு?

சானியா மிர்ஸா ஆதரவு யாருக்கு?
Published on

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது. இதன் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டியை காண,  இந்திய பிரபலங்கள் பலர் லண்டனில் முகாமிட்டுள்ளனர். இதில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவும் ஒருவர். கடந்த சில நாட்களாகவே தனது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக்குடன் இங்கிலாந்தை சுற்றி வருகிறார் சானியா. 
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போட்டியின் போது மாலிக்கை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். அப்போது கிரிக்கெட் வர்ணனை செய்துகொண்டிருந்த கங்குலி, அவரை பாகிஸ்தான் ஆதரவாளர் என்று கூறினார்.
இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் அவர் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது. 

இந்திய வீரர்கள் பவுண்டரி, சிக்சர் அடித்தால் கைதட்டுவரா அல்லது பாகிஸ்தான் வீரர்கள் விக்கெட் எடுத்தால் கைதட்டுவரா என்பதை கவனிக்க, ரசிகர்களை விட டிவி கேமராவே அவரை அதிகம் மொய்க்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com