இந்திய அணிக்கு மீண்டும் கைகொடுத்த ரன் அவுட்

இந்திய அணிக்கு மீண்டும் கைகொடுத்த ரன் அவுட்

இந்திய அணிக்கு மீண்டும் கைகொடுத்த ரன் அவுட்
Published on

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அசார் அலி 59 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை பாகிஸ்தான் தொடக்க வீரர்களான அசார் அலி மற்றும் ஃபகர் ஜமன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அணியின் ஸ்கோர் 128 ரன்களாக இருந்தபோது 59 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த அசார் அலி, ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

இதேபோன்றதொரு நிகழ்வு தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் நடந்தது. அரையிறுதிக்கு தகுதிபெற தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் அந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அணியின் ஸ்கோர் 300ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிவிலியர்ஸின் ரன் அவுட் ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. டிவிலியர்ஸின் விக்கெட்டை அடுத்து சீட்டுக்கட்டுபோல தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழக்க 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதேபோல அசார் அலியின் ரன் அவுட்டுக்குப் பின்னர் இந்திய அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com