நியூசிலாந்துக்கு எதிராக இன்று முதலாவது டி20 போட்டி: இந்தியாவின் 'வீறுநடை' தொடருமா?

நியூசிலாந்துக்கு எதிராக இன்று முதலாவது டி20 போட்டி: இந்தியாவின் 'வீறுநடை' தொடருமா?
நியூசிலாந்துக்கு எதிராக இன்று முதலாவது டி20 போட்டி: இந்தியாவின் 'வீறுநடை' தொடருமா?

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி ராஞ்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை, இந்திய அணி 3-0 என முழுமையாக வென்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ராஞ்சியில் நடைபெறுகிறது.

இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும், நியூசிலாந்து அணி மிட்செல் சான்ட்னர் தலைமையின் கீழும் விளையாட உள்ளன. பிப்ரவரி 9-ல் தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், முகம்மது  சிராஜ், முகம்மது ஷமி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி டி20 தொடரை வெல்ல எல்லா வகையிலும் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இருக்கும் இந்திய அணி இந்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்த முனைப்புக் காட்டும். இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்திய அணியில் பிரித்வி ஷா ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு டி20யில் விளையாட உள்ளார்.  கூடவே முகேஷ் குமார், ஜிதேஷ் சர்மா ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இருப்பினும் ஆடும் அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங். குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல்

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), பிளேர் டிக்னெர், சோதி, பென் லிஸ்டெர், லோக்கி பெர்குசன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com