ஸ்ரேயாஸ் சதம் வீண் - டெய்லர் அதிரடியில் நியூசிலாந்து வெற்றி

ஸ்ரேயாஸ் சதம் வீண் - டெய்லர் அதிரடியில் நியூசிலாந்து வெற்றி

ஸ்ரேயாஸ் சதம் வீண் - டெய்லர் அதிரடியில் நியூசிலாந்து வெற்றி
Published on

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினாலும் நிலைத்து நின்று ஆடவில்லை. பிரித்வி 20, மயங்க் 32 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர், விராட் கோலியும், ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து சீரான வேகத்தில் ரன்களை அடித்தனர். 51 ரன்களுக்கு விராட் கோலி ஆட்டமிழக்க ஸ்ரேயாஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர், வந்த கே.எல்.ராகுல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் அதிகரித்தது. சதம் விளாசிய ஸ்ரேயாஸ் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார்.

இறுதியில் கேதர் ஜாதவ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அதிரடி காட்ட இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 6 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசி 88(64) ரன்களுடனும், கேதர் 26(15) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 348 என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து வீரர்கள் தங்களது ஆட்டத்தை தொடங்கினர். அந்த அணியில், குப்தில், நிக்கோல்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

குப்தில் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த பிளந்தெல் 9 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், நிக்கோல்ஸ் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நியூசிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த நிக்கோல்ஸ் 78(82) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர், டெய்லர் உடன் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்களால் எளிதில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. சிறப்பாக விளையாடிய லாதம் 69(48) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நீஷம் 9, கிராண்ஹோம் 1 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் சற்றே திருப்பு முனை ஏற்பட்டது. ராஸ் டெய்லர் சதம் அடித்து களத்தில் இருந்தாலும், இந்திய அணி பக்கம் வெற்றி திரும்புமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அடுத்து களமிறங்கிய சண்ட்னர் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்து வெற்றியை பதிவு செய்தது. டெய்லர் 109(84) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், ஒருநாள் தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று நியூசிலாந்து அணி அசத்தியுள்ளது.

சதம் விளாசிய ராஸ் டெய்லர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com