நியூசிலாந்துடனான கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்துடனான கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்துடனான கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
Published on

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் ஷர்மா, தவன், ரஹானே, மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், சேஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் ஆகியோரும் அணியில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்சன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளென் ஃபிளிப்ஸ், டாட் ஆஸ்ட்லே ஆகியோர் அறிமுக வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர் டாம் ப்ரூஸ் ட்வெண்டி ட்வெண்டி அணியில் மட்டும் இடம்பெற்றுள்ளார். இதேபோல் அனுபவ வீரர் ராஸ் டெய்லருக்கு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொடர் நிறைவடைந்ததையடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுடன் விளையாடுகிறது. இதற்காக அந்த அணி, நேற்று இந்தியா வந்துள்ளது. இந்த அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் வரும் 22-ம் தேதி நடக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com