நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டி - இந்தியா முதல் பேட்டிங்
உலகக் கோப்பை 4வது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்கிறது.
உலகக் கோப்பை பயிற்சி போட்டிகள் நேற்று முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் ஒரு போட்டியில் மோதின. இதில் இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தானை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் 4வது பயிற்சிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறுகிறது. லண்டனில் உள்ள கென்னிங்டான் ஓவல் மைதனாத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. வழக்கம்போல் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே இருவர் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்துள்ளனர்.