மீண்டும் தொடங்கியது இந்தியா-நியூஸிலாந்து அரையிறுதிப் போட்டி
மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி மீண்டும் தொடங்கியது.
உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர் குப்தில் 1 (14) ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நிகோல்ஸ் 28 (51) ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டெய்லர் மற்றும் வில்லியம்சன் நிலைத்து விளையாடினர். கேப்டன் வில்லியம்சன் 67 (95) ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால் டெய்லர் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்து ஆடினார்.
46.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் விட்ட இடத்தில் இருந்து போட்டி தொடங்கியுள்ளது.